கார் மோதி முதியவர் சாவு
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவெளி ஊராட்சி ஆப்பிராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 62). இவர் ஆப்பிராயிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சனவெளிக்கு பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுகுடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சென்னை பழைய வண்ணார்பேட்டையை சேர்ந்த விமல்ராஜ் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.