தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
டி.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவர் தமிழக அரசு போக்குவரத்து கழக டி.கல்லுப்பட்டி பணிமனையில் தற்காலிக டிக்கெட் கேன்வாசராக வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக உடல் உபாதையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கந்தசாமி, டி.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அரசு நேரக்காப்பாளர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.