பெண்ணிடம் செல்போன் பறித்த முதியவர் கைது

பெண்ணிடம் செல்போன் பறித்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-16 19:05 GMT

பெண்ணிடம் செல்போன் பறித்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

செல்போன் கைது

துறையூர் நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 56). இவருடைய மகன் பாரதி (31). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது திருச்சி காந்திமார்க்கெட் வரகனேரி பகுதியை சேர்ந்த அலியார் (60) என்பவர் பொன்னம்மாளிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அலியாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்