ரெயில் மோதி மூதாட்டி பலி

திருவள்ளூர் அருகே ரெயில் மோதி மூதாட்டி பலியானார்.;

Update:2022-07-19 11:44 IST

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நேற்று சுமார் 70 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்