210 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை

மன்னார்குடியில் ஜமாபந்தி நிறைவையொட்டி 210 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-06-01 17:21 GMT

மன்னார்குடி, ஜூன்.2-

மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி 5 நாட்களாக நடைபெற்றது. இதில் மன்னார்குடி தாலுகாவுக்கு உட்பட்ட 95 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 667 மனுக்களை அளித்தனர். இதில் 376 மனுக்கள் ஏற்கப்பட்டது. 244 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 47 மனுக்கள் பிற துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 210 பேருக்கு முதியோர் உதவித் தொகை ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வழங்கினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்