முதியவர் வீடு சேதம்
நத்தம் அருகே பலத்த மழைக்கு முதியவர் வீடு ஒன்று சேதம் அடைந்தது.
நத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 65) என்பவருடைய வீட்டின் கான்கிரீட் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி மற்றும் பாத்திரங்கள் சேதமடைந்தன. மேலும் சம்பவத்தின்போது அவருடைய வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து நத்தம் போலீசார், வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.