பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்ட அதிகாரிகள்
பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை நெல் சாகுபடி பல்வேறு பயிர் பருவங்களில் உள்ளது. குறிப்பாக தற்சமயம் நடவு செய்து 30 நாட்களான வயல்களில் பாசி படர்ந்து பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ச்சி குறைந்து கருகிய நிலையில் காணப்படுகிறது இது குறித்து செய்திதினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக தா.பழூர் ஒன்றிய உதவி வேளாண் இயக்குனர் செல்வகுமார் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்பவல்லுனர் திருமலைவாசன் ஆகியோர் அணைக்குடி மற்றும் ஸ்ரீபுரந்தான் கிராம பகுதி பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டனர்.