பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் நாமக்கல் பஸ் நிலையத்தில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்தவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் முன்பு பொது இடங்களில் புகை பிடித்தல் தவறு என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு விளம்பரங்களை வைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பழனிசாமி, எர்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.