கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

ராஜபாளையத்தில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-22 19:58 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் படி ராஜபாளையத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், சிவகாசி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜமுத்து, ஒன்றிய பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் குமார் ஆகியோர் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம், தென்காசி ரோடு மற்றும் சங்கரன்கோவில் முக்கு ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், பழக்கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

கெட்டுப்போன உணவு

இதில் உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சிகள் 10 கிலோ மற்றும் கெட்டுப்போன உணவு வகைகள் 3 கிலோ பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. பிளாஸ்டிக்பைகளில் பார்சல் செய்து பயன்படுத்தியதற்காக 5 கிலோ பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து 10 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் உணவு தயாரிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்