ரூ.7 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வரும் சாலையை அதிகாரிகள் ஆய்வு

ரூ.7 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வரும் சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-24 20:35 GMT

பொன்மலைப்பட்டி:

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியையும், கிழக்குறிச்சியையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சாலை மிகவும் மோசமாக பழுதடைந்தது. இந்த நிலையில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ஊராட்சி ஒன்றிய சாலைகள் திட்டம், மாவட்ட கிராம சாலைகள் தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கிழக்குறிச்சிக்கும்-சோழமாதேவிக்கும் இடையே 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு சிறிய பாலங்கள் உள்பட சாலையை புதுப்பிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த சாலையை திருச்சி (நெடுஞ்சாலைத்துறை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையிலான குழுவினர் உள் தணிக்கை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் கோட்ட பொறியாளர்கள் (நெடுஞ்சாலை) திட்டங்கள் முருகானந்தம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர்கள் கோமதி, உதவி பொறியாளர் புள்ளம்பாடி பிரிவு கிஷோர் ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்