உளுந்தூர்பேட்டை மளிகைக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

உளுந்தூர்பேட்டை மளிகைக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-04-03 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை மளிகைக்கடை ஒன்றில் வாலிபர் ஒருவர் வாங்கிய பிரபல தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான சாக்லேட்டில் புழு இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சாக்லேட் நிறுவனத்தின் டீலர் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். அப்போது எந்த கடையிலும் காலாவதியான சாக்லேட்டுகள் மற்றும் புழு உள்ள சாக்லேட்டுகள் கிடைக்கவில்லை. இருப்பினும் வீடியோவில் காணப்பட்ட சாக்லேட்டின் வகைகள் வேறு ஏதேனும் கடைகளில் இருந்தால் அவற்றை திரும்ப பெறுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தினா்.

Tags:    

மேலும் செய்திகள்