கடைகளில் அதிகாரிகள் சோதனை

கம்பம் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2023-07-07 18:45 GMT

கம்பம் பகுதியில் உள்ள கடைகளில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மனுஜ் ஷியாம் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விஜயராகவன், செந்தில்குமார், கனகமணி ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். அதில் 2 கடைகளில் முத்திரையிடப்படாத தராசுகள் பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த 2 தராசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்