விருத்தாசலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

விருத்தாசலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தாா்.

Update: 2023-02-26 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.2 கோடி மதிப்பில கலையரங்கம் கட்டும் பணி, பெரியார் நகர் வடக்கில் ரூ.1 கோடியில் பூங்கா அமைக்கும் பணி, தெற்கு பெரியார் நகர் என்.எல்.சி. சாலையில் ரூ.15 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி, ரூ.37 லட்சத்தில் பூதாமூர் நல்லேரியில் குளம் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை செங்கல்பட்டு நகராட்சிகள் மண்டல இயக்குனர் சசிகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். மேலும் ரூ.5.41 கோடியில் தொடங்கப்பட உள்ள நவீன மார்க்கெட் அமைக்கும் பணி குறித்தும், நகராட்சியில் ரூ.1.90 கோடியில் 33 சாலைகள் அமைக்கம் பணி குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து மாசி மக திருவிழாவை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் கழிவுநீரை வெளியேற்றும் பணிகள், தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும் நகராட்சிகள் மண்டல இயக்குனர் சசிகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் சிவசங்கர், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் கருணாநிதி, சிங்காரவேல், தீபா மாரிமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்