சாலை விதிகளை மதித்தால் விபத்துகளை தவிர்க்கலாம்
சாலை விதிகளை மதித்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கூறினார்.
சாலை விதிகளை மதித்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கூறினார்.
கண் பரிசோதனை முகாம்
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி வாகன டிரைவர்கள், லைசன்ஸ் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் பணிக்கு வந்த வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது.
முகாமிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், கண் டாக்டர் முரளிதரன் மற்றும் மருத்துக்குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கூறியதாவது:-
விபத்துகளை தவிர்க்கலாம்
சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுக்க வேண்டி உள்ளது. சாலை விதிமுறைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். அப்போது தான் விபத்துகளை தவிர்க்க முடியும். பாதுகாப்பான பயணம் என்பது மிக முக்கியமானது. உரிய வயதில் டிரைவர்கள் அனைவரும் அவசியம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றால் தான் விபத்துகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.