மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்- மின்வாரிய அதிகாரி

மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மன்னார்குடி நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-09 18:45 GMT

மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மன்னார்குடி நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் கம்பிகள்

தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடக்கூடாது. கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர்கள் துணையோடு வெட்ட வேண்டும்.

மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது, மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பிகள், மின் கம்பங்களில் கயிறு கட்டி துணிகளை காய போடுவது, மின் கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டுவது உள்ளிட்ட செயல்களை தவிர்ப்பது நல்லது.

விபத்துகளை தவிர்க்கலாம்

வீடுகளில் மின் சாதனங்களில் மின்கசிவு சாதனத்தில் ரப்பர் காலணியை அணிந்து கொண்டு மெயின் சுவிட்ச்சை அணைத்து, கசிவை சரிசெய்ய வேண்டும். மின் பாதைக்கு கீழே போர்வெல் போடக்கூடாது இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி போன்ற மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது மாலைகளை மின் பாதைகளில் வீசக்கூடாது. மின் வாரிய கம்பங்களில் கேபிள் உள்ளிட்ட வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் கட்டக்கூடாது.

இதுபோன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் மின் விபத்துகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்