ரத்னா சிட்பண்ட்சின் தலைமை அலுவலகம் திறப்பு

நல்லம்பள்ளியில் ரத்னா சிட்பண்ட்சின் தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-09-02 17:06 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ரத்னா சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் புதிய தலைமையிட அலுவலகம் திறப்பு விழா கணபதி பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குனர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பா.ம.க. நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, பெரியசாமி, சண்முகம், அன்புகார்த்திக், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை நிர்வாக இயக்குனர் புவனேஸ்வரி ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதில் அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, பா.ம.க. நிர்வாகிகள் அறிவு, மனோகரன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, குப்பன், ஜெயக்குமார், முத்துவேல், மாது, வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் முருகன், காமராஜ், ஊராட்சி தலைவர் கலைச்செல்வன், வக்கீல் வேல்முருகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சிட் உறுப்பினர்கள், பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்