ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-01 12:15 GMT

சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ரெயில் நிலையம் வரை செல்லும் ரெயில்களில் ஏறி கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை ெசய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரெயிலில் தனிப்படையினர் ஏறி சோதனை செய்தனர். அதில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக கழிவறை அருகே நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், ஒடிசா மாநிலம் போடன் அடுத்த துபா தன்பதி பகுதியை சேர்ந்த ராமேஸ்வர்சாஹூ என்பவரின் மகன் மகேந்திரசாஹூ (வயது 32) எனக்கூறினார்.

அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து ஈரோடு பகுதிக்கு கடத்தியதாக கூறினார். இதையடுத்து மகேந்திரசாஹூவை தனிப்படை போலீசார் கைது செய்து, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் ெசய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்