கோவையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
கோவையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
லடாக் ஹாட் ஸ்பிரிங்க் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 20 பேர் இறந்தனர். இந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நினைவு தூண் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இந்த நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், உதவி கமிஷனர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஆயுதப்படை போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கியை தலைகீழாக பிடித்து தங்களது அஞ்சலியை செலுத்தினர்.