விருத்தாசலத்தில்சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு

விருத்தாசலத்தில் சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-05-24 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தினத்தந்தி நிறுவனரும், தமிழர் தந்தையுமான சி.பா.ஆதித்தனாரின் 42-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் தடயம் பாபு தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர்கள் பரவலூர் ஆசைத்தம்பி, ஷேக் அலி, மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளரும், வக்கீலுமான திருமாறன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் குருசாமி நாடார், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் பி.ஜி.சேகர், வி.சி.க. நகர செயலாளர் முருகன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் கல்பனா பாபு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் நீர்நிலை நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இளங்கோ, மாநில பொருளாளர் வேணுகோபால், தமிழ்நாடு அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலகுமார், பிரகாஷ், முரளி, நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க செயலாளர் மணிவண்ணன், தொழிலதிபர் அபித்தா குமார், தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் எம்.ஆர்.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்