இன்று மாலை குஜராத் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..?
முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் செல்லும் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடைபெறும் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.