ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

கள்ளக்குறிச்சியில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்

Update: 2022-06-24 17:00 GMT

கள்ளக்குறிச்சி

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழுதலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவர் பொய்யாமொழி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆஸ்துமா நோயாளிகள் 14 பேருக்கு தன்சொந்த நிதியில் இருந்து 5 கிலோ அரிசி, கொண்டக்கடலை 2 கிலோ, பச்சைப்பயிறு 2 கிலோ, நாட்டு சர்க்கரை ஒருகிலோ மற்றும் வேர்க்கடலை, முந்திரி, திராட்சை, பூஸ்ட், முட்டை, பழவகைகள் அடங்கிய தொகுப்பை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் வழங்கினார். இதில் ஒன்றிய அலுவலக மேலாளர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் இளவரசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யநாராயணன், கள அலுவலர் சுமதி, சுகாதார பார்வையாளர் பாக்கியலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்