ஊட்டியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-09-01 13:33 GMT

ஊட்டி

போஷான் மா திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில், நேற்று கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஊட்டி நகர பஸ் நிலையத்தில் தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் தோடர் பழங்குடியின தாய்மார்கள், கிராம சுகாதார செவிலியர், செவிலியர் பயிற்சி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். சேரிங்கிராஸ் பகுதியில் பேரணி நிறைவு பெற்றது.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஊட்டச்சத்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மற்றும் அரசு வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ண பலூன்களை பறக்க விட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அதிகாரி தேவக்குமாரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, ஊட்டி நகராட்சி ஆணையர் காந்திராஜ் உட்பட அதிகாரிகள் கலந்து கொணடனர்.

Tags:    

மேலும் செய்திகள்