மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

சோளிங்கரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

Update: 2023-03-30 18:01 GMT

சோளிங்கர் வட்டார வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. வட்டார வாழ்வாதார இயக்க மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமன், பிச்சாண்டி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மு.நானிலதாசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ஊட்டச்சத்து உணவு குறித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் வைத்திருந்த ஊட்டச்சத்து உணவுகளை சுவைத்து பார்த்து, சிறப்பாக ஊட்டச்சத்து உணவு தயாரித்த குழுக்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட வளப்பயிற்றுனர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்