கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை, நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருப்பத்தூர் ஒன்றியம், பொம்மிகுப்பம் ஊராட்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வி.தேன்மொழி வெங்கடேசன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கி பேசினார். மருத்துவ முகாமில் 1,615 பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் மாத்திரைகள் வாங்கி பயன்பெற்றனர்.
திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம்,
துணைத் தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், நகர அவைத்தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் பூங்காவனம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கனகராஜ் நன்றி கூறினார்.