செவிலியர்கள் தர்ணா போராட்டம்
தஞ்சையில் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதாரசெவிலியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவி இந்திரா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவிகள் பாரதி, வீரலட்சுமி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் வட்டார மருத்துவ வலர் ஒருவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், கோஷங்களை எழுப்பினர்.