கண்களில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கண்களில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (எம்.ஆர்.பி) செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் அந்த செவிலியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களது குடும்பத்துடன் இரு கண்களையும் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செவிலியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.