செவிலியர் தின கொண்டாட்டம்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி
உலக செவிலியர் தினம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மருத்துவ இருப்பிட அதிகாரி சரவண பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னதாக தலைமை செவிலியர் தனலட்சுமி வரவேற்று பேசினார். நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். அதை தொடர்ந்து கேக் வெட்டி செவிலியர் தினம் கொண்டாப்பட்டது. மேலும் பொன்னாடை போர்த்தி செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் செவிலியர்கள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, சித்ரா ராணி, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.