புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திர வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு முறைகளை கையாள்கின்றனர். அந்த வகையில் குளிர்ச்சி தரக்கூடிய நுங்குகளை பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் சாலையோரம் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் ஒரு இடத்தில் சாலையோரம் விற்பனைக்காக நுங்கு குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போது எடுத்த படம்.