ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
வேதாரண்யத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 164 ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடந்தது. . பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனிச்சாமி (பொறுப்பு) வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்தமிழ் மற்றும் சமூக அறிவியலுக்கான பயிற்சியை மாவட்ட கருத்தாளர்கள் நீலமேகம், முருகானந்தம், பரமசிவம், சிவபாலன் ஆகியோர் எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு இந்த எண்ணும், எழுத்தும் திட்டத்தினை எடுத்துச்செல்வதற்கு ஆயத்தமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.