நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-09 03:29 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். முன்னதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். மேலும் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக இன்று காலை நேரில் ஆஜராக போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீமான் வெளியூர் செல்ல இருப்பதால், அவர் 12-ந்தேதி ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்