ஐ.டி.ஐ.யில் என்.டி.சி. சான்றிதழ் பெற்றவர்கள் மாற்றமிருப்பின் சரி செய்து கொள்ளலாம்
ஐ.டி.ஐ.யில் என்.டி.சி. சான்றிதழ் பெற்றவர்கள் மாற்றமிருப்பின் சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரின் குறிப்பாணையின்படி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) பயிற்சி பெற்று என்.டி.சி. சான்றிதழ் பெற்றவர்கள் தங்களது சுய விவரங்களான பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் மாற்றமிருப்பின் சரி செய்து கொள்ள NCVT MIS Portal-லில் Profile grievance-ல் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அரியலூர் அரசு ஐ.டி.ஐ.யின் முதல்வரை நேரிலோ அல்லது 9499055877 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.