வடமாநில வாலிபர் படுகொலை

கீழமணக்குடி அருகே தும்புமில்லில் வடமாநில வாலிபர் படுெகாலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சொந்த ஊருக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பீகாருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-23 14:30 GMT

தென்தாமரைகுளம்:

கீழமணக்குடி அருகே தும்புமில்லில் வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சொந்த ஊருக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பீகாருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

வாலிபர் கொலை

கீழமணக்குடி அருகே உள்ள சித்தன்குடியிருப்பில் உள்ள தனியார் தும்பு ஆலையில் பீகார் மாநிலம் கிழக்குசெம்பரம் மாவட்டம், சம்பகாச் பகுதியை சேர்ந்த நானாக் ஷா என்ற முன்னா (வயது 30), ரமேஷ் (32) ஆகியோர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் ஆலை வளாகத்தில் உள்ள அறையில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு இவர்கள் இடையே மது போதையில் தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழிந்து இருவரும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர்.

ஆனால் நள்ளிரவு ரமேஷ் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நானாக் ஷாவின் தலையில் சிமெண்ட் கல்லை போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பீகார் செல்ல முடிவு

இதுகுறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரமேஷை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அவரிடம் செல்போன் இல்லாததால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடந்த அன்று இருவரும் சீட்டு விளையாடியதாகவும், அதில் கையில் இருந்த பணத்தையும் ரமேஷ் இழந்ததாகவும் தெரிகிறது. கையில் பணம் இல்லாத நிலையில் யாரிடமாவது பணம் வாங்கி சொந்த ஊருக்கு தப்பிசென்றாரா?, அல்லது அவருக்கு தெரிந்த வடமாநில தொழிலாளர்களுடன் குமரி மாவட்டத்தில் எங்காவது பதுங்கி இருக்கின்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரமேஷின் சொந்த மாநிலமான பீகாருக்கு செல்லவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்