ெரயிலில் அடிபட்டு வட மாநில தொழிலாளி பலி

ெரயிலில் அடிபட்டு வட மாநில தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-03 19:52 GMT


ஒடிசா மாநிலம் நரபங்கப்பூர் ரவண குண்டா பகுதியை சேர்ந்தவர் ராதேஷ்யாம் கண்டா (வயது27). இவர் கடந்த 3 வருடங்களாக சூலக்கரையில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் தன் சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். நேற்று காலை இவர் விருதுநகர் துலுக்கப்பட்டி ெரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள பட்டம்புதூரில் ெரயில் பாதையை கடந்த போது அந்த வழியாக சாத்தூரிலிருந்து விருதுநகர் ெரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்