ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழந்த வட மாநில வாலிபர்

ஆம்பூர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழந்த வட மாநில வாலிபர் காயத்துடன் உயிர்த்தப்பினார்.

Update: 2022-12-12 17:35 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நடராஜபுரம் பகுதியில் கேரள மாநிலம் மங்களுர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலிலிருந்து வடமாநில வாலிபர் ஒருவர் தவறி விழுந்து, அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதி மக்கள் மீடடு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரெயிலில் இருந்து தரறி விழுந்த வாலிபர் உத்தரபிரதேச மாநிலம், ஹிமத்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சந்த் என்பவரது மகன் அஜய் குமார் (வயது 24) என தெரியவந்தது. இவர் கேரளாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும், விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றபோது தவறி விழுந்ததும் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்