வடமாநில தொழிலாளி மர்ம சாவு

Update: 2023-09-02 18:45 GMT

ஓசூர்

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் பனுகவடி கிராமத்தை சேர்ந்தவர் ராம் லகான். இவரது மகன் அங்கீத் (வயது22). இவர், ஓசூரில் தர்கா அருகே கிருஷ்ணா நகரில் தனது சகோதரி கிரண் என்பவர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்