வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.;

Update: 2023-10-14 18:45 GMT

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்த, தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.5 கோடியும், காயமடைந்த மற்றும் நோய்வாய்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தியை கொள்முதல் செய்ய ரூ.4 கோடியே 56 லட்சமும், விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு ரூ.5 கோடியும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு ரூ.5 கோடியும் ஆக மொத்தம் ரூ.20 கோடி, அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற்று பயன்பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், எந்த நோக்கத்திற்காக நிதி உதவி கோரப்படுகிறது என்ற உரிய விவரங்களுடன் உரிய படிவத்தில் விண்ணப்பத்தை நேரடியாக தமிழ்நாடு கால்நடை நல வாரியத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்