கட்டிடப்பணியின் போது தீப்பற்றாத பொருட்களை தடுப்புகளாக பயன்படுத்த வேண்டும்

சிவகாசி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கட்டிடப்பணிகளின் போது தீப்பற்றாத பொருட்களை தடுப்புகளாக பயன்படுத்த வேண்டும் என்று தாசில்தார் லோகநாதன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-11-21 19:05 GMT

சிவகாசி, 

சிவகாசி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கட்டிடப்பணிகளின் போது தீப்பற்றாத பொருட்களை தடுப்புகளாக பயன்படுத்த வேண்டும் என்று தாசில்தார் லோகநாதன் வலியுறுத்தி உள்ளார்.

அம்மன் கோவில்

சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற சிலர் பயன்படுத்திய பேன்சிரக பட்டாசு வெடித்து சிதறியதில் 150 அடி உயரம் உள்ள கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 10 அடி உயரம் பயன்படுத்தப்பட்ட தென்னகீற்றுக்கள் மட்டும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு குறித்த நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தாசில்தார் ஆய்வு

இந்த நிலையில் தீ விபத்து நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்ற சிவகாசி தாசில்தார் லோகநாதன் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் கோவில் நிர்வாகிகளை சந்தித்து தொடர்ந்து நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் எளிதில் தீப்பற்றாத தடுப்புகளை கட்டிட பணிக்கு பயன்படுத்த வலியுறுத்தினார். கோபுரத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 10 அடி உயரம் உள்ள தென்னங்கீற்று மட்டும் எரிந்ததை சுட்டிக் காட்டி இனி வரும் காலங்களில் தென்னங்கீற்றுகளை தடுப்புகளாக பயன்படுத்த வேண்டாம் என்றும், நைலான் பைபர் ஷீட்டை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்