மருத்தானி கே.வினோத் நியமனம்

தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளராக மருத்தானி கே.வினோத் நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

Update: 2022-12-27 19:39 GMT

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர். அசோகன் பரிந்துரையின் பேரில் மருத்தானி கே.வினோத் தேவகோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

தேவகோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.வினோத் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்