கர்நாடகாவுக்கு நாளை லாரிகளை இயக்கவேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.;
சென்னை,
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
அதேபோல, வட மாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரும் லாரிகளும் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்திவைக்கவும் எனவும், லாரிகள் அனைத்தும் அந்தந்த எல்லைகளில் நிறுத்தவேண்டும் என்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.