இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்புக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-11-06 07:53 GMT

நாமக்கல்,

நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அதிமுகவை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி திமுக நினைக்கிறது. அதிமுக உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும். அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது. பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்புக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்