அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பின்னர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நான் ஆட்சியில் இருந்தபோது போராடிக்கொண்டிருந்தேன், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன்.
நான் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.