மோடியின் பிம்பத்தை தமிழக மக்கள் மனதில் இருந்து யாராலும் அழிக்க முடியாது-மத்திய மந்திரி பேச்சு

தமிழக மக்கள் மனதில் உள்ள மோடியின் பிம்பத்தை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் பேசினார்.

Update: 2022-10-14 18:45 GMT

பொள்ளாச்சி

தமிழக மக்கள் மனதில் உள்ள மோடியின் பிம்பத்தை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் பேசினார்.

கூட்டம்

பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் பிரிவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தென்னை விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முன்னேற விவசாயிகளின் வாழ்வு முன்னேற வேண்டும். அதற்கான கொண்டு வரப்பட்டது தான் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்த கூடிய திட்டம். நாட்டில் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரைக்கும் ரூ.2 லட்சம் கோடி நேரடியாக வங்கி செலுத்தப்பட்டு உள்ளது. ராஜூவ்காந்தி கூட இதுகுறித்து கூறியிருக்கிறார். மத்தியில் உள்ள அவர்களின் அரசு ரூ.100 கொடுத்தால் கீழே செல்லும் போது ரூ.15 தான் செல்லும். விவசாய துறையில் புள்ளி விவரங்களை பார்த்தால் நம்முடைய நாடு பல்வேறு பொருட்கள் உற்பத்தி பெருக்கத்தில் 2-வது இடத்தில் உள்ளது.

தமிழக மக்கள் மனதில்

தென்னை விவசாயத்தை பொறுத்த வரை பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அந்த பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க தொடர்ந்து இங்கே வர தர உள்ளேன். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் அறிவித்து உள்ளார். இன்னும் திட்டங்களை அறிவிக்க உள்ளார். நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்கள் மாநிலங்களில் இருருந்து தமிழகத்தில் நம்முடைய திட்டங்களை அவர்களுடைய திட்டமாக அறிவித்து திருட முயற்சிக்கின்றனர். அந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி உங்கள் திட்டமாக அறிவித்து கொள்ளலாம். ஆனால் தமிழக மக்கள் மனதில் உள்ள பிரதமர் மோடியின் பிம்பத்தை அழிக்க முடியாது. விவசாயிகள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு முழுதீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக பி.ஏ.பி. திட்டத்திற்கு வித்திட்ட முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர், பழனிசாமி கவுண்டர், சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம் ஆகியோர் உருவபடத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள், பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்