8 ம் நம்பர் மார்க்கெட் நடைபாதை கடைகளை அகற்ற கூடாது

காந்திபுரத்தில் 8 ம் நம்பர் மார்க்கெட் நடைபாதை கடைகளை அகற்ற கூடாது என்று கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்

Update: 2022-05-30 13:40 GMT

கோவை

காந்திபுரத்தில் 8-ம் நம்பர் மார்க்கெட் நடைபாதை கடைகளை அகற்ற கூடாது என்று கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களாக அளித்தனர். அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் சமீரன், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் காந்திபுரம் 8-ம் நம்பர் மார்க்கெட் நடைபாதை வியாபாரிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக காந்திபுரம் 8-ம் நம்பர் மார்க்கெட் பகுதியில் பழக்கடை, பூக்கடை, டிபன் கடை, பழைய பூட்டு கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் அங்கு கடை போடக் கூடாது என்று கோவை மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கூறினர். நடைபாதை கடைகளை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தொடர்ந்து அங்கேயே கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளி மூடல்

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாண வர்களின் பெற்றோர்கள் அளித்த மனுவில், இங்குள்ள தனியார் பள்ளியில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் எங்களின் குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பள்ளியை நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.

மேலும் அவர்கள் இலவச கல்வி திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் விவரங்க ளை அரசிற்கு அனுப்ப வில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே சம்மந்தப்பட்ட பள்ளி மீதும், எங்களது குழந்தைகளுக்கு வேறு பள்ளியில் இடம் கிடைக்கவும் நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

காலாவதியான குளிர்பானங்கள்

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா சங்க நிர்வாகி மணிகண்டன் தலைமையில் குளிர்பானங்களை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் அளித்த மனுவில், கோவை மாவட் டத்தில் தரமற்ற குளிர்பானங்கள் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் சிறுவர்களின் உடல் நலன் பாதிக்கிறது. எனவே தரமற்ற மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் கவர்கள்

கோவை மாவட்ட சுதேசிய வணிகர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தினர் அளித்த மனுவில், மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் கவர் பயன்பாடு இருந்தால் அபராதம் விதிக்கின்றனர். இதை தவிர்த்து பிளாஸ்டிக் கவர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ரத்தினபுரி நாராயணசாமி லே -அவுட்டை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், மாநகராட்சி சார்பில் குடியிருப்புக்கு மத்தியில் கட்டப்பட்ட மின் மயானம் மற்றும் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கந்துவட்டி

கோவை சி.எம்.சி. காலனியை சேர்ந்த வெள்ளிங்கிரி அளித்த மனுவில், கூலி வேலை செய்யும் நான் கந்து வட்டி கொடுமை தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

அந்த புகாரை வாபஸ் பெறுமாறு. தற்போது சிலர் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

காரமடை புத்தர்நகர், பூதிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. மாணவ-மாணவிகள் நலன் கருதி போதிய அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்