தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை...!
சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.;
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட சுமார் 10 இடங்களிலும், சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளிலும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனைக்கான முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காலையிலே பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.