தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனை நிறைவு - 10 பேர் கைது
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவடைந்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். தமிழகத்தின் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையை கண்டித்து பி.எப்.ஐ கட்சி தொண்டர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சோதனை நடைபெற்ற இடங்களில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.