செய்திகள் சில வரிகளில்......
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.;
சென்னை,
* அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசினார்.
* தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார். மேலும் மாநாட்டுக்கு போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
* உக்ரைன் - ரஷியா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று இத்தாலி கூறியுள்ளது.
* தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
* மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரினா சபலென்கா, ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
* கென்யாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
* 2026 தேர்தல் தொடர்பாக தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.
* 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது.