சிவகங்கையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க கோரி சிவகங்கையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சிவகங்கையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை நேருபஜாரில் உள்ள வாலாஜா நவாப் பள்ளி வாசல் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் சேக் யமானி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதிக்க கோரி ேகாஷம் எழுப்பினர். இதில், எஸ்.டி.பி.ஐ. சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது ஆசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.