புத்தாண்டு சிறப்பு வழிபாடு
சேரன்மாதேவி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி - களக்காடு சாலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சேரன்மாதேவி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்திலும், தூய இம்மானுவேல் ஆலயத்திலும் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.