அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

சிங்கம்புணரி அருகே பிரான் மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-31 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே பிரான் மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். டாக்டர்கள் செந்தில்குமார், செந்தில், சித்த மருத்துவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பலூன் உடைத்தல், பானை உடைத்தல், பாட்டு போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள், சித்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ பிரிவு உதவியாளர்கள், மருத்துவ வாகனம் ஓட்டுநர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்