விளாத்திகுளம் அருகே புதிய மின்மாற்றி அமைப்பு

விளாத்திகுளம் அருகே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

Update: 2022-09-20 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை-கந்தசாமிபுரம் கிராமத்தில் புதிதாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு மின்வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மின்வாரி நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், மின்சார ஊழியர்கள், தி.மு.க நிர்வாகிகள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், எட்டயபுரம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணி மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணியை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.இதில் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்